திருமணச்சடங்கு
![]() |
மற்றசம்ஸ்காரங்களைதந்தையோ,ஆசார்யனோசெய்துவைப்பார். இனிவரும் ஸ்மாச்காரகளை தனக்குதானே ஒருவன் செய்துகொள்ள விவாகம்செய்துவைப்பார்கள்.விவாகம்என்பதுஉத்வாஹம்,பாணிக்ர ணம்,கன்யாதானம்,கல்யாணம் என்ற பெயர்களிலும்அழைக்கப்படுகிறது.
திருமணம் எத்தனை வகைப்படும்?
1.பிரம்மம் 2.தைவம். 3.ஆர்ஷம் . 4. பிராஜாபத்யம். ( இவைகள் மரபு வழி மணங்கள் ) 5.ஆஷுரம் . 6.காந்தர்வம்.(இதை தினைக் கலப்புகாதல் மணம் என்பார்கள் ) 7. ராஷஸம். 8. பைஷசம் . 9. ஏறு தழுவுதல் 10.பலதார மணம்.
1.ப்ராம்மம்
உத்தமமான ப்ர்ம்மச்சாரிக்கு ஒத்தகுலத்தினைச்சேர்ந்தபெற்றோர்கள் தங்கள் பெண்ணை வரதஷினையோ,பரிசமோஇல்லாமல்கன்யாதானம் செய்து தருவது ப்ராம்மா விவாகம் என்று அழைக்கபடும்.
2. தைவம்.
யக்ஞத்தில் ஒரு ரித்விக்காக உள்ளவருக்குக் கன்யகையை அலங்கரித்து
தஷைனையாக விவாகம் செய்தவது தைவம் என்று அழைக்கப்படும்.
தஷைனையாக விவாகம் செய்தவது தைவம் என்று அழைக்கப்படும்.
3. ஆர்ஷம்.
இரண்டு பசுக்களை தர்ம சாஸ்த்திரப்படி மனமகனிடமிருந்து பெற்றுக்
கொண்டு பெண்ணை விதிப்படி விவாகம்செய்வது ஆர்ஷம் என்று அழைக்கப்படும் .
4. ப்ராஜாபத்யம்.
ருதுவாகிவிட்டஒரு பெண்ணை அவளின் தந்தை தர்மகாரியங்களை
தன் மகள் செய்ய ஒரு நல்ல பிர்ம்மச்சரியை தேடி விவாகம் செய்வித்து
இருவரும் சேர்ந்து தர்மங்களை செய்யுங்கள் என்பது ப்ராஜாபத்யம்.
இந்த நான்குமுறைகள்தான் புனிதமானது.
5. ஆஷுரம்.
ஆஷுரம் என்பது அஷுரத்தனமான (முரட்டுத்தனமான)முறையில் ஒரு
பெண்ணுக்கு விருப்பமில்லாத ஒருவனை அவனிடமிருந்து பொருளை
அவளின் பெற்றவர்களோ,உறவினர்களோ பெற்றுக்கொண்டு விவாகம்
செய்வது ஆஷுரம். இரண்டாந்தரமாகவும்,வயது மூத்தவர்கலுக்கும் இளம் பெண்களை திருமணம் செய்வதும் ஆஷுரம் ஆகும்.
6. காந்தர்வம்.
ஆணும் பெண்ணும் இச்சையால் ஒன்று கூடி பின்னல் விவாகம் செய்து
கொள்வது காந்தர்வ விவாகம். சில மலைவாழ் மக்கள் ஒன்றாக வாழ்ந்துபின்னல்பிடித்துஇருந்தால்மணம்செய்துவாழ்கிறார்கள். நாகரீகம் என்ற பெயரில் மரபு ,உறவு முறை சிலர் மீறி கலப்ப மணம் செய்து கொவதும் காந்தர்வமே.
7. ராஷஸம்.
பெண்ணின் விருப்பம் மட்டும் அறிந்துகொண்டு அவளின் பெற்றோர் ,
உறவினர்களின் விருப்பத்துக்கு மாறாக பெண்ணை தூக்கி சென்று
கல்யாணம் செய்துகொள்வது ராஷஸம்.
8. பைஸாசம்.
மணப்பெண்ணின் விருப்பம் இல்லாமல் முறையற்ற விரோதமான வகையில் மயக்க மருந்து கொடுத்தும், கெடுத்தும் மிகவும் நீச்சதரமாக
மணம் செய்வது பைஸாசம் ஆகும்.
9. ஏறு தழுவுதல்.
வீர உணர்வுகளை வெளிப்படுத்தல் 'ஏறு தழுவுதல்' ஆகும்.ஏறு என்றால்
காளை , தழுவுதல் என்றால் பிடித்தல் என்று பொருள்படும். தங்கள் பெண்களை மணக்கப்போகும் ஆடவனின் திறமையை வீரத்தின்
அடிப்படையில் காணவேண்டி ஏற்படுத்திய வீர விளையாட்டே இந்த
ஏறு தழுவுதல் என்ற இந்த காளை அடக்கி தழுவி நிற்கும் விளையாட்டு.
இவனால்தான் தன்னுடைய மகளையும், சொத்துக்களையும் காக்க
முடியும் என்று மகளை திருமணம் செய்வார்கள்.
10. பலதார மணம் .
ஒரு ஆண் பல பெண்களை மணக்கும் முறை வாழ்வில் நாம் தினமும் காணமுடிகிறது. முதல் மனைவிக்கு குழ்ந்தைஇல்லை என்று மட்டும் மறுமணம் செய்துகொள்வது பொது. ஆனால் தன்னுடைய அடங்காத காமத்துக்ககவும், சொத்துக்கும் பலர் பல பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். இது சட்டப்படி மிகமிக பெரிய தவறு.
சிலஇனத்தில்சில பெண்கள்பலஆண்களைஅவர்கள்குலவழக்கப்படி
திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழ்கிறார்கள்.
சிலஇனத்தில்சில பெண்கள்பலஆண்களைஅவர்கள்குலவழக்கப்படி
திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழ்கிறார்கள்.
விவாஹம் என்ற திருமணம் விளக்கம்.
வி+வாஹம் என்றால் 'சிறப்பு வஹிப்பது' என்று பொருள்.யார் எதை
வஹிப்பது? ஆண், பெண் இருவரும் சேர்ந்து சம்சாரம் என்ற லௌகிக
பந்தத்தில் சீரும் சிறப்புமாக ஒழுக்கமாக வாழவேண்டும் என்பது பொருள்.
மணம் என்றால் 'கூடுதல், நெருங்குதல், கலத்தல், அழகுபெறுதல்' என்பது
தமிழ் வழக்கு சொற்கள் ஆகும். மேன்மையான ஒன்றை குறிப்பிட 'திரு '
என்ற அடை மொழி கொடுத்து அழைப்பது பண்டைக்கால மரபு.அதனால்
வாழ்வின் அடிப்படையான இந்த கூடுதல் சடங்கு திருமணம் என்று அழைக்க படுகிறது.
இந்துத் திருமணம் ஆகம மரபு படி சில அம்சங்களை தழிவியது
இந்து சமைய முறைப்படி குருமார்கள் இறைவனின் ஆசியுடன்
நடத்தி வைப்பார். அந்த மரபுகளை விவரமாக இப்போது காணலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக