சனி, 15 செப்டம்பர், 2012

INDHU MATHM 'Samaiyam' part' 2' LOWKIKAAM.part.ONE

           கடவுள் உண்டு,கடவுள் உண்டு,மனிதனை படைத்தது கடவுள்தான் .

                                  


                                     லௌகீக வாழ்க்கை           

 இந்து மத ஸம்ஸ்காரங்கள்  என்றால் என்ன? அவை யாவை? 
 "ஸம்ஸ்காரோ ஹி நாம  கார்யாந்தர  யோக்யதா கரணம் " 



            என்கின்ற வார்த்தைக்கு  ஒரு பொருளைக் கொண்டு ஒரு செயலை நல்லபடியாக முடிப்பது  என்பதாகும் . ஸம்+காரம் என்று பிரித்தல் ஸம்-என்றால் நன்றாக,காரம்- என்றால் ஆக்குவது  அதாவது ஸம்ஸ்காரம் என்றால் நன்றாக ஆக்குவது என்று பொருள்படும் . அதாவது உணவு தயாரிக்கவிறகுதேவைபடுகிறது,விறகை ஈரத்தன்மைபோக்கவெய்ய லில்உலர்த்துகிறோம்,உலர்த்துதல்விறகுக்குநாம்செய்யும்ஸம்ஸ்காரம்.வீட்டுக்குவெள்ளைஅடிப்பது,பூட்ஸ்பாலிஸ்போடுதல்ஸம்ஸ்கார ங்கலே தைத்தான்லௌகீகம்என்றுசொல்லுகிறோம்.இதுபோல்ஒருஜீவனை ஆன்மிகத்தில்இறைவனிடம்சேர்க்கசுத்தபடுத்துகிற செயலை மானிட தர்ம ஸம்ஸ்காரங்கள்என்றுநமக்குசாஸ்த்திரங்கள் சொல்லுகின்றன. அவைகள் என்னென்ன என்பதை விரிவாக காண்போம்.
                              ***************************************************  




                                ஒன்று. கர்ப்பாதானம்.


      ஒரு ஜீவனைஆண்-பெண் சங்கமத்தினால்"கர்ப்பம் தரிக்க ச்செய்தல் "
என்பது இதன் பொருள். ஆடு,மாடு போல் மிருகத்தனமாக புணராமல் 
விதி முறைகளை கடைப்பிடித்து புணர்ச்சியில் ஈடுபடுதல் வேண்டும்.
ஆண்-பெண் கலப்பு விதிமுறைப்படி மதிக்காமல் வெறும் காமசுகத்துக்கு 
மட்டம்  ஈடுப்பட்டால் பிறக்கும் ஜீவனைத்தன் அது பாதிக்கும்.

                                                       கன்னிஹா தானம் பெற்ற ஒரு ஆண்மகனுடன்,
பாணிக்கிரஹனம் செய்து கொண்ட ஒரு பெண் முறைப்படிபெற்றஜீவன் 
தான் பல வகையிலும் சிறப்புற்று விளங்கும்.  
                                                                     *****************
         கர்பாதான  பெண்-ஆண் ஸங்கமம் சம்பந்தமான  பொது நியமனங்கள்.

மாதாமாதம் மாதவிடாய் நாளிலிருந்து பதினாறு இரவுகள் பெண்களுக்கு கர்பாதான சரியான காலமாகும். 
           
இதில்  முதல் நான்கு நாட்டளில் கூடுதல் கூடாது . மீதமுள்ள பன்னிரண்டு 
இரவுகளில் இரட்டைப்பட்ட நாட்களில் உறவு கொள்ளலாம்.

இந்தப் பன்னிரண்டு நாட்களுக்குப் பின்னால் அடுத்து மாதவிடாய் வரை 
உறவு கூடாது .

அமாவசை,அஷ்டமி,பௌர்ணமி,சத்ர்த்தி,திதிகளிலும், மகம்,முலம், ஆகிய நஷ்த்திரங்களிலும்  பெண்கள் பற்ப்பல நியமங்களுடன் இருந்தால்   உடல் மெலிந்து பக்குவமாய் விடும். இந்நிலையில் உறவு கொண்டால் அவசியம் கர்ப்பம்தரிக்கும்.

ஒரு இரவு ஒருமுறை மட்டுமே உறவு நன்மைபயக்கும். பகலில் உறவு 
கொள்ளுவது  கூடாதது .

இந்த ஸமஸ்காரம் ஒரு ஜீவனை  நாம் படைக்க ஒரு கருவியாக மட்டும் பயன்படுவதால் நீக்குப் போக்காக இருக்க கூடாது. ஏன்என்றால் ஒர்றறிவு
முதல் ஐந்து அறிவு ஜீவன்கள் இனவிருத்திக்காக மட்டும்தான் உடலுறவு 
கொள்ளுகின்றன, ஆனால் நாம் மட்டும்தான்  உடல் சுகத்துக்காக உறவு 
கொள்ளுகிறோம். 
                                                ******************************


             ஸம்ஸ்காரம். இரண்டு .  பும்ஸ்வனம் 








    கருவில் உண்டன ஜீவனை குறித்து செய்யப்படும் இரண்டாவது சடங்கு .

 கருதரித்த மூன்றாம் மாதம் அந்தஜீவன் ஆணா,பெண்ணா என்றுஅமைப்பு
மாறும் நிலையில் "ஆண் பிள்ளை பெறச்செய்தல்" என்ற சடங்கு இது.

முதலில்பிறக்கும் முதல்குழந்தை பிற்காலத்தில் தாய் ,தந்தை, குடும்ப பாரத்தை சுமக்க தலைச்சன் ஆணாகஇருப்பது நல்லதுஎன்றும் ,முதலில் பெண் பிறந்து அது கஷ்டம் படக்கூடாது என்பதற்காகவும் செய்யப்படும்  
சடங்கு இது. இது முதல் கருவுற்ற சமையம் மட்டும் செய்யப்படும்.
             
ஆலமரத்தின் மொட்டை நன்றாக கசக்கி கருவுற்ற கர்ப்பிணி பெண்ணை      மல்லாந்தவாறு  வைத்து வலது மூக்கினுல் சாற்றை பிழிவார்கள் ,அந்த  பெண்ணும் சாற்றை நன்றாக உறிஞ்சவேண்டும். இப்படிசெய்வதால்அவள்  கர்பத்தில்உள்ள ஜீவன் ஆணாக மாறி விடும். இப்படிசடங்கைசெய்தால் குழந்தைஆணாக பிறக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. நம்புவது, நம்பாதது அவரவர் விருப்பம்.
                                                       **************************

     ஸம்ஸ்காரம் . மூன்று . ஸீமந்தோந்நயநம் .








                 கர்ப்பம் தரித்த ஜீவனை சுமக்கும் பெண்ணுக்கு ஆறாவது அல்லது 
எட்டாவது மாதத்தில் செய்யப்படுவது இது.

"ஷீமந்தம்"  என்றால் தலை வகிடு என்றும்," உந்நயனம்"என்றால் மேல் 
நோக்கிஇழுத்துக்கொண்டு போவது என்றும் பொருள். சாஷ்த்திரங்கல்படி 
கர்ப்பிணிப்பெண் கணவனாலேயே நல்ல சுபதினத்தில் உயர்ந்த கருத்து 
மிகுந்த மந்திரங்கள் கூரிசெய்யப்படும் சடங்கு இதுவாகும்.

                                                      ஜீவனை சுமந்துள்ள கர்ப்பவதியின் வகிட்டில் 
மந்திரங்கள் ஓதி கீழிருந்து மேல்நோக்கி பன்றியின் முள்ளால் மெதுவாக 
கீறிக் கோடுபோடுவதால் உள்ளே இருக்கும் ஜீவன் நன்றாக இருக்கும் 
என்பது ஐதிகம். கண்ணாடி வளையல் போடுவது அப்படி,இப்படி திரும்பும் 
பொழுது வளையல் உடையாமல் பாதுகாப்பாக நடப்பதால், பெண்ணின் 
வயற்றுபகுதி பாதுகாக்கபடும். இப்படி செய்வதற்குத்தான்   வளைகாப்பு, ஸீமந்தம்செய்வது என்றும் , கட்டுசொத்து விருந்து  என்றும் கூறுவார்கள்.
                        *******************************************************


               ஸமஸ்காரம்   நான்கு. ஜாதகர்ம



         கருவிலிருந்த ஜீவன் பிறந்தவுடன் ஜாதகர்ம ஸம்ஸ்காரம்  செய்ய 
வேண்டும்.கர்ப்பதானம் செய்த ஜீவனின் தந்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் 
ஆற்றில் நீராடவேண்டும்,தானங்கள் செய்யவேண்டும். குறிப்பாக விதை 
நெல் தானியத்தைத் தரவேண்டும். 
                                                ***************************


                  



                  ஸம்ஸ்கரம். ஐந்து. நாமகரணம். 


     நாமகரணம் என்றால் " பெயரிடுவது" என்பது பொருள். இதைதொட்டில்
இடுவது  என்றும் கூறுவார்கள் . பிறந்த ஜீவனாகிய குழந்தையின் பிறந்த 
பதினோராவது  நாள் இந்த சடங்கை செய்வார்கள். மேலும் தற்பொழுது 
ஜாதகர்ம,தொட்டிலிடுவது ,பெயரிடுவதும் சேர்த்து புண்ணியாவஜனம்
என்ற சடங்கை  செய்து ஜீவனை பெற்ற தாய்  தலைக்கு குளிக்க செய்து 
தீட்டு கழிப்பதாக  கொண்டடுகிறார்கள்.

                                                                     குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு 
குழந்தையின் தந்தை சொல்லும் மந்திரம் என்னவென்றால் "என்னுடைய 
உடலில்லிருந்து வந்திருக்கிறாய், என் ஆசைகளை பூர்த்தி செய்து வந்து 
இருக்கிறாய்.,நான் உன்னை ஆசையுடன் அனைத்து கொள்ளுகிறேன்."

மேலும் இந்த நஷத்திரத்தில் பிறந்தால் இந்த பெயர்வைக்க வேண்டும்.
கடவுளின் பெயர்களை  வைக்கவேண்டும். நம் முனோர்கள் பெயர்கள் 
வைக்கவேண்டும்.என்று தரமான பெயர் தேர்ந்து எடுத்து அந்த பேரை 
குழந்தையின்காதில் கூப்பிடுவர்கள் இதை வீட்டு பெரியவர்கள் தொடங்கி 
வைப்பார்கள். 
                            ************************************************


            ஸம்ஸ்காரம். ஆறு. அன்னப்ராசனம்

             


       ஆறாவது  ஸம்ஸ்காரம் இது . குழந்தைக்கு உணவூட்டும் சடங்கு இது .
இதை ஆறாவது மாதத்தில் கருத்துக்கள் நிறைந்த மந்திரங்கள் கொண்டு 
வீட்டிலும்  சிலர் கோவிலிலும் தந்தை மந்திரங்கள் சொல்ல குழந்தைக்கு 
உணவு ஊட்ட  குழந்தை சாப்பிடும்.  
========================================================================




                   ஸமஸ்காரம். ஏழு. சௌளம்  

ஏழாவதுஸம்ஸகாரம்சிகைமழித்தழ்ஆகும்.முதல்ஆண்டுநிறைவு  அடைந்தாவுடன்அவரவர்குலஆசாரப்படிதலையைமுண்டனம்     செய்வது.மூன்றாவதுவயதில்சிகைவைப்பது,காதுகுத்துவதுமரபு                           வேத அத்யயனம் செய் யும்  பொழுதும் . தர்மப்படி இல்லறத்தில் 
இருந்து கொண்டு  தாம்பத்திய  உறவு  கொள்வது ஆகியவற்றிலே 
சரீரத்துக்கும்  சரீரத்தின்  நாடி  சலனங்கள் மூலம்  சித்தத்துக்கும் 
ஏற்பட வேண்டியதான  பலத்துக்கு  தலையில் சிகை என்ற ரஷை 
இருப்பது பெரிய  பாதுகப்பகும் .    

------------------------------------------------------------------------


       





        


    


















உப நயனம்  எட்டாம் ஸம்ஸ்காரம் 






உபநயனம் என்பது ஆண் குழந்தைக்குமட்டுமே உரியது.                                                                        இதுவும் பெரியவர் களால்  நடத்தபடுவது . உப-என்றால்  சமீபத்தில் ,நயனம் என்றால் அழைத்து கொண்டு போவது என்பது பொருள் . தந்தை மூலம் ஆச்சாரியார்  கொண்டு ப்ரம்மச்சர்ய  ஆசிரமத்திற்கு அழைத்து செல்லுதல்  எனப்படும் . உபநயனம்  செய்ய  

ப்ராம்மணனுக்கு ----எழு  வயது  இரண்டு மாதத்துக்கு  மேல் .

சத்திரியர்களுக்கு ---பன்னிரண்டு  வயது  வரை .

வைச்யர்களுக்கு ----பதினாறு  வயது  வரை .

உபநயன சம்ஸ்காரத்தின்  அடையாளமாக முப்புரிநுல் அணிவிக்கபடும் 
காயத்ரீ  மந்திரம்  உபதேசிக்கப்படும்.

''காமம் புகும்  முன்னே காயத்ரீ  புகுந்துவிட  வேண்டும் '' என்பது 
பழமொழி.    

பிரம்மச்சர்ய  ஆசிரமத்திற்கு ஆரம்பம்  உபநயனம். அந்த அச்ரமத்தின் 
நிறைவு  சமாவர்த்தனம் . பிரம்மச்சர்ய  வாழ்ககையில்  வாசனை 
திரவ்யங்களை பூசிக்கொள்ள கூடாது .
------------------------------------------------------------------------------------------------------------------------------




               சமவர்த்தனம் ஒன்பதாவது ஸம்ஸ்காரம் 

                                                                                                                                                  ஸ்நாநம்  என்றும்  இதற்குப் பெயர் உண்டு . நல்ல மங்களகரமான 
த்ர்வ்யங்கள் எண்ணை .சிகைகாய்த்துள் கொண்டு வெந்நீர் ஸ்நானம் 
செய்து  உயர்ந்த ஆடைகளை உடுத்துவது  ப்ரம்மச்சர்யா ஆச்ரமத்தின்  
முடிவில்தான்  ஒருவனுக்கு  விதிக்கப்பட்டுள்ளது . ''குருகுலத்தில் 
இருந்து தன்அத்யயனத்தை முடித்துக் கொண்டு தனது இருப்பிடத்திற்குத்
திரும்புதல் ''என்பது  இதன்  பொருள்.   





                        விவாஹம்  பத்தாவது  ஸம்ஸ்காரம் 

            இதற்கு முன் முடிந்த எல்லா ஸம்ஸ்கரங்கள் தந்தையோ,
ஆசார்யனோ செய்து வைப்பார்கள். இந்த சம்ஸ்காரம் மூலமாக 
இனி  வரும்  சம்ஸ்காரங்கள் யாவையும் ஒருவன் தனக்குத்தானே 
செய்து  கொள்ள வேண்டியவையாகும்.

விவாஹம் என்பது  உத்வாஹம், பணிக்ரகனம், கன்யாதானம் ,
கல்யாணம்  என்றும்  அழைக்கப்படுகிறது .

வி +வாஹ, உத்+வாஹ,  என்ற இரண்டும்  'சிறப்பாக அமைவது'
என்ற பொருள் படும் . ஆண் +பெண் சேர்ந்தால் தம்பதி .தம்பதி 
ஒன்று சேர்ந்து க்ருஹஸ்த தர்மத்தை  சிறப்பாக அமைத்து 
கொள்வது  என்பது பொருள் . மனைவியானவள்  கணவனுடன் 
சேர்ந்து தர்மனுஸ்டானத்துக்கு துணையாக வேண்டும். மேலும் 
இந்த ஸ ம்ஸ்காரத்தை ஸஹதர்மசாரிணி  ஸம்யோகம் என்றும் 

 
அழைப்பர்கள்  


------------------------------------------------------------------------------------------------------------------------------

முதல்   ஏழு  ஸமஸ்காரங்கள் ஆண் ,பெண்  இருபாலருக்கும் சமம் 
எட்டாவது  ஸமஸ்காரம் பெண்களுக்கு இல்லை. சமவர்த்தனம் என்ற 
ஒன்பதாவது ஸமஸ்காரம் பெண்களுக்கு ருது அடைதல்  என்று 
நடத்தப்படுகிறது.


                                           ஸமஸ்காரம்  ருது 

  

 ருது என்பதற்கு பூப்படைந்த  பெண்ணை புனிதமாக்கும் நீராட்டு விழா 
எனபொருள்படும்.அதாவது பருவ வயதை அடைந்த  இது 12 வயது முதல் 
15வயதுவரைஅவரவர்உடல்வகுபடிபால்முதிர்ச்சிஅடைந்துபருவமாற்ற 
பொழுது  நடைபெறும் சமயச்சடங்கு ஆகும், இதன் பொருள் அந்தப்பெண் 
சந்தான விருத்தி அடையக்கூடிய கரு உற்பத்தியாகும் மாதவிடாய் நடை 
பெற்ற சுபநிகழ்ச்சியாக  அழைக்கப்படுகிறது. முன்பெல்லாம் பூப்ப்டைந்த 
பெண்ணின் தாயாரிடம் பேரன் பிறந்து விட்டானா? என்று கேட்பார்கள். 







பார்த்த பார்வை யாளர்களுக்கு  நன்றி 




என் தொடர்ப்புக்கு :- 91 +95006 71949.




       

கருத்துகள் இல்லை: