கடவுள் இருக்கிறார் இல்லை என்பவன் முட்டாள் .
உபநயனம் என்றால் என்ன ?
வேதத்தை கற்பதற்கு வேத விதிகள்படி செய்ய வேண்டிய சம்ஸ்காரம் உபநயனம் எனப்படும். எந்தக் கர்மாவால் அல்லது எந்தக் கர்மாவில் ஆசாரியனால் வேதவித்தை கற்ப்பிக்க நல்ல மூகூர்த்தில் மாணவன் தன்னருகில் கூட்டிக்கொள்ளப்படுகிறனோ அது உபநயனம் என்றும் பெயர் பெரும்.தாயிடம் முதல் பிறப்பும் , உபநயனத்தின் பொது மௌஞ்ஜீபந்தனத்தால் இரண்டாவது பிறப்பும், பிராம்மண, ஷத்திரிய, வைசியர்களுக்கு ஏற்படுவதால் அவர்கள் துவிஜர்கள் என்று அழைக்கபடுவர்கள். இதன் பொருள் இருபிறப்பாளர் எனப்படும்.
"மாதுர்க்ரே விஜநநம் த்விதீயம் மௌஞ்ஜீ பந்தனாத் \ ப்ரஹ்மண,ஷத்ரிய, விசஸ்ஷுத்திர்க்காரர்,-தஸ்மாதேதே த்விஜா; ஸ்ம்ருதா"
உபநயனம் செய்விக்க உரிமையுள்ளவர்கள் ;-
உபநயனம் செய்விக்க உரிமையுள்ளவர்கள் ;-
பிதா, பிதாமஹன்,தமையன், ஞாதிகள், கோத்திரத்தில் பிறந்த முதியோர், என முன்னவர் இல்லதபோது பின்னவர் பின்னவராக செய்விக்க அதிகாரமுள்ளவர்கள் . முன் கூரியவ்ரிள்ளத போதுதன் குலத்துதித்தவரோ , தன் ஸுத்திரக்காரர் செய்விக்கலாம் .எல்லா வர்ணங்களுக்கும் பிராம்மணனோ , தன் வர்ணத்தில் கிருஹ்ஸ்தனய் இருப்பவன் செய்விக்கலாம்-மனைவியில்லதவன் ,சன்னியாசிகள் உபநயனம் செய்விக்க அதிகாரமில்லை .
செய்முறைகள் ;-
1 பூர்வாங்க்கம். 2.புண்யாஹ வாசனம். 3. ய்க்நோபவீத்தாரணம்.4.குமார போஜனமும் வபனமும் 5.பிரம்மசாரியம். 6. உப நயனம் 7 .உபநயன ஹோமம். 8.ஜ்யாதிஹோமம் . 9.ய்சுர்ப்ரேஷ ப்ராயச்சித்தம் . 10. ப்ரணீ தா மோஷணம் . 11. பிரஹ்மொபதேசம். 12.ஸ்மிதாதானம் .13. பிஷாசரணம். 14. ஆசீர்வாதம்.
1.பூர்வாங்கம் இந்தசுபதிதியில்இன்னநஷத்திரத்தில்இன்னராசியில்பிறந்தவனும் இன்னசர்மாஎன்றுபெயருடையவனுமாகியஇந்தக்குமாரனுக்குஉபநயனகர்மாவின்அங்கமாகஉதகசாந்திஜபகர்மாவை செய்கிறேன்.
அங்குரார்ப்பண கர்மாவைச் செய்கிறேன்.
ப்ரதிஸ்ரப்ந்த கர்மாவை செய்கிறேன்.
நாந்தீமுக பிதிரு தேவதைகளுக்கு ஹீரன்ய்தான வடிவில் பிரீதிசெய்யும் கர்மாவைச் செய்கிறேன்.
இவ்வாறு ஸங்கல்பித்த்துப் பூர்வாங்கமான கர்மாக்களை ஆரம்பிக்க வேண்டும்.ஞானமின்றி உபநயனம் செய்துவைப்பவனும் உபநயனத்தால்ஞானத்தை நாடாதவனும் இருளிலிருந்து இருளிலேயே புகுவர் என்று வேதம் கூறுகிறது.
2.புண்யாஹ வாசனம்.
பரிசுத்தமான இடத்தில் பசுவின் சாணியால் சதுரமாக பூமியை மெழுகி அதன்மேல்நெல்லைப்பரப்பிஅதன்மேல்நெல்லைபரப்பிஅதன்மேல் அரிசியை பரப்பி அதன் மத்தியில் பத்மம் வரைந்து, பத்மத்தின் மேல் கிழக்கு நுனியாக தர்ப்பைகளைப் பரப்புக. அதன் மேல் பூர்ணகும்பத்தை கூர்ச்சத்துடன் மாவிலை தேங்காயுடனம் ஸ்தாபிக்க, பவித்திர மணிந்து தர்பையிலமர்ந்து தர்ப்பையை கையில் தரித்து ஸங்கல்பம் செய்ய வேண்டும் .
3.யக்ஞோபவீததாரணம்
இந்தசுபதிதியில்இன்னநஷ்த்திரத்தில்இன்னராசியில்பிறந்தவனும், இன்னசர்மாஎன்ற பெயர் கொண்டவனுமான இந்தகுமாரனுடைய உபநயன கர்மாவில் யக்ஞோப வீதசுத்தியின் பொருட்டு புன்யஹவசனம் செய்விக்கின்றேன், என்று ஸங்கல்பித்துப் புண்யஹ மந்திரம்ஜபம்செய்து அந்த தீர்த்தத்தால் யக்ஞோப வீதத்தை புரோஷித்துப் பெரியவர்களின் ஆசியைபெற்று மாணவனுக்குமௌனமாய்ஆசமனம்குருவால் செய்வித்தல். பரிசுத்தி யளிக்கக் கூடியவற்றுள் சிறந்ததும் ஆதியில் பிரம்மா தோன்றும் பொது அவருடன் தோன்றியதும்,ஆயுளையும், முதன்மையையும் அளிக்க வல்லதுமாகிய ,வெண்மையான பூணூலை மாணவனுக்கு தரிக்கிறேன். இவன் இதனால் ஞான ஒளியும்,பலமும் நிலைபெற்றவனாய் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் .சுருதிகளிலும் ஸ்மிருதிகளிலும் விதிக்கப் பெற்ற நித்திய கருமங்களை அனுஷ்டிக்கும் தகுதி ஏற்படுத்துவ தர்க்கக வும், பிரம்ம தேஜஸ் விருத்தி ய்டைவதர் காகவும் யக்ஞோபவீதத்தை 'பூனூலை"அணிவிக்கிறேன். கிரகங்களின் பிரீத்திக்காக தானம் செய்யவேண்டும்.அவரவர் சக்தியை அனுசரித்து பிராம்மணனுக்கு பதினாரு வயதுவரையும்,ஷத்திரியன்க்கு இருபத்தி இரண்டு வயது வரையும்,வைசியனுக்கு இருபத்தினான்கு வயது வரையும் .உபநயனத்தை ஒதிக்கி வைக்கலாம்.
-ஆப.1.27
4. குமார போஜனமும் வபனமும்
உப்பு,கரம்,இல்லாமல்நெய்யும்,பாலும்சேர்த்தஅன்னத்தால்குமாரனுக்கு போஜனம் செய்வித்து தலையின் நான்கு புறமும் சிகை வபனம் செய்யும் சடங்கு. குளிர்ந்த நீருடன் வெந்நீரைக் கலந்து 'ஆபஉந்தத்து ' என்னும் மந்திரத் தால் சிரத்தை வபனம் செய்க. இதன் பொருள் 'புனிதமாக்கும் இந்த குமரனுக்கு வாயுதேவனே நீ வெந்நீருடன் இங்கு எழுந்து அருள வேண்டும்,அதிதி தேவதையே கேசங்களை வபனம் செய்து இவனுக்கு நீண்ட ஆயுள் தரும்படியும் வேண்டுதல் ஆகும்.
5.பிரம்மசாரிக்குரிய அடையாளங்களைதரித்தல்
இம்மாணவனை நீண்ட நல்வாழ்வுக்கு வழிகாட்டி அழைத்து செல்ல அக்னிக்கு வடக்கில் ஸ்தாபிக்கப்பட்ட கல்லின் மேல் மாணவனை வலது பாதத்தைவைக்கும்படிசெய்துமந்திரங்கள் ஆசார்யன் சொல்ல வேண்டும். மந்திரத்தின் பொருள் இந்த கல்லைப் போல் நீஉறுதியாக இருக்கவேண்டும்.
மாணவனை கிழ்க்குமுகமாக கல்லின் மேல்நிறுத்தி அவனுக்கு உடுத்தபுது வஸ்திரங்களை மந்திரங்களை சொல்லியே கொடுக்க வேண்டும். "வஸ்திரமே உன்னை ரேவதீ தேவதைகள் பஞ்சைச் சீரக்கினர்கள்,கிருத்திகா தேவதைகள் நூல் நூறார்கள் , புத்தி தேவதைகள் நெய்தார்கள்,க்னா ' என்ற தேவதைகள் தறியிலிருந்து நெய்து எடுத்தார்கள், இதுபோல் ஆயிரம் தேவதைகளின் உழைப்பு உன் இழைதோறும் உள்ளது. ஆகவே வஸ்திரமே இவனை நன்றாக உடுத்தி நூறு ஆண்டுகள் வாழும்படி அனு கிரகங்கள் செய்யுங்கள் " என்பது மந்திரங்களின் பொருள்.
வஸ்த்திரம் உடுத்தும் மந்திரத்தின் விளக்கம் "மாணவனே எல்லா நலனுக்கும்நீகாரணமாகஇருக்கும்பொருட்டுஇந்தவஸ்த்திரத்தை அணிந்துகொண்டாய் உன்னைசூழ்ந்தவர்களின்இன்னலைப்போக்கிக் காப்பவனாய்விளங்கு வாயாக,மேலும் .பல வழிகளிலும் பொருள்தேடி அவைகளை நல்ல வழியில் ஆண்டும் மற்றவர்களுக்கும் பிரித்து கொடுத்தும் பல்லாண்டு நோய்நொடி இல்லாமல் வாழ்வாயாக "என்பது இதன் பொருளாகும்.
6. உபநயனம்.
"தேவஸ்ய த்வா " என்ற மந்திரத்தால் மாணவனை குரு தன்னருகில் அனைத்துக் கொள்கிறார். ' சுப்ரஜா' என்ற மந்திரத்தைகாதில் ஓதுவார் .பொருள் வீரர்களில் நல்ல வீரனாகவும், ஞான ஓளியால் நல்ல ஓளி யுடையவனாகவும், போஷனையால் நல்ல புஷ்டியுடைவனகவும் விளங்கவாய் என்பதாகும்.
' பர்ஹமசர்யமாகாம் ' என்பது மாணவன் குரு கேள்விகளுக்கு பதில் உ ரைத்தல் .மாணவன்;- பிரம்மசாரிய விருதத்தை ஏற்றுக்கொண்டு விட்டேன் என்னை ஸவித்ரு தேவனுடைய அருளால் உங்கள் அருகில் தங்கள் பக்கத்தில் வைத்துகொள்ளவேண்டுகிறேன்.குரு;- சூரியதேவனே இவன் உன்னுடைய பிரம்மசாரியாவன். நீ இவனை இரஷித்துருளல் வேண்டும். இவன் அகாலத்தில் ம்ரணமடையக்கூடது. நீண்ட ஆயுள் உடையவனாக வைத்திருக்கவும்.
7. உபநயன ஹோமம்
ஏற்கனவே குறிப்பிட்டபடி ஆசாரியர் ஆஜ்யபாகம் முடியச்செய்த அக்கினியில்மாணவன்கையைப்பிடித்துக்கொண்டு ஆஹுதிகளைச் செய்வித்து, ஜயாதி ஹோமத்தையும் ப்ரிஷேசனம் வரை செய்க 'யோகே யோகே' மந்திரங்களை மாணவனுக்கு ஆசார்யன் சொல் வித்து மாணவன் ஹோமம் முடிக்கவும். ஹோமத்தின் விளக்கம் அக்னியே நீர் இந்த மாணவனை நீண்ட ஆயுளும், புத்தி கூர்மை உடையவனாகவும் செய்வீர். வருணனே இவனுடைய பிரம்ம்சர்யம் முடிந்தபின் இவனுக்கு பிரியமான புத்திரன் உண்டாகும் வீரியம் கொடுப்பீர். ஸோமராஜனே நீரும் ஆசிர்வதிக்கவும். அதிததேவியே தாயாக இவனை காப்பாய் . தேவர்களே புத்திரர்கள் மக்களை பெற்று தந்தைகளாகும் பொழுது இடையில் ஆயுளை சோதிக்காமல் அருள் புரியுங்கள்.
8. ஜயாதி ஹோமம் .
கர்மாவின் செழிப்புக்காக ஜயாதி ஹோமம் செய்விக்கிறேன். இதை ஆசாரியனே செய்யவேண்டும்.
9.யஜுர்ப்ரெஷ பிராயசித்தம்
எந்த கர்மாவில் வேத மந்திர உச்சாரணத்தில் பிழை இருக்குமோ அங்கு ' புவ; ஸ்வஹா! வாயவ இதம் ந மம !' அந்தக்கர்மவிற்கேற்ப அக்னியில் ' புவ; ஸ்வஹா !' என்ற ஆஹுதியோ 'அனாஜ் ஞாதம்'என்ற மூன்று ஆஹுதியோ செய்யப்படவேண்டும்.
10. பரணிதா மோஷணம் .
'அனாஜ் ஞாதம் யதாஜ் ஞதம் ' முதல் 'சப்தயோ யோனீ ராப்ருனஸ்வக் ருதேன ஸ்வஹா' என்றவரை ஹோமம் செய்து நெய்பத்திரத்தை வடக்கேவைத்துவிட்டுப் பிராணாயாமமும் ப்ரிஷேசனமும் செய்து ப்ரணீ தா மோஷணம், முடிக்கவும்.
11. பிரஹ்மோபதேசம்.
நீக்கமற நிறைந்த சபையோர்களே! உங்கள்பாதங்களில் என்னால் ஸமர்பிக்கப்பட்ட இந்த ஸ்வர்ண தஷினையை ஏற்று இன்ன நஷத்தி ரத்தில் இன்ன ராசியில் பிறந்தவனும் , இன்ன சர்மா என்ற பெயருடைய இந்த குமரனுக்கு பிறந்தது முதல் இந்தவினடிவரை பிறசாதிததியிடமும்,செவிலித்தயிடமும் பாலுண்டதாலும், பிரசாதி கூட்டத்தில் சமபந்திபோஜனம் சாப்பிட்டத்தாலும்,தொட்க்கூடாதவற்றை தொட்டதலும் ஏற்பட்ட பரிசுத்தமின்மையால் ஏற்ப்பட்ட எல்லா பாவங்க்ளுக்கும் பிராயசித்த வாயிலாக காயத்ரீ ஸ்வீகாரத்திர்க்கும் யோக்யதை அடைய அனுக்கிரகம் செய்தருள வேண்டும்.
12.ஸ்மிதா தானம் .
விட்டிலிருந்து அக்கினியெடுத்து பிரதிஷ்டை செய்து விறகிட்டு எரியச்செய்து காலை ,மற்றும் மாலை ஸ்மிதா தானம் செய்யவேண்டும்.தொடர்து செய்துவந்த்ல் ஆயுளும், செல்வமும் கூடியவனாய் நன் மக்கட் பேறு பெற்றவனாகவும், ஞான ஒளி பெற்றவனாகவும்,சூரியன்போல் பிரகாசிக்க வேண்டுதல் ஆகும்.
13. பிஷா சரணம் .
பிர்ம்மசர்யவ்ரதம்;-பகலில் தூங்கக்கூடாது. வாசனை திரவிங்கள் உபயோகிக்கக் கூடாது . பெண்களுடன் நெருங்கி பழகக் கூடாது. நாட்டி யங்களை பார்க்ககூடது. உலக நடவடிக்கையை பற்றி வம்புப் பேசக்கூடாது. பிட்ஷை யில் கிடைத்ததை கொண்டுதான் வாழ வேண்டும் .குருவுக்கு அடங்கியவனாய் ' பவதி பிஷம்.தேஹி,---என்று கூறிப் பிஷை எடுத்து குருகுல வாழ்க்கை வாழவேண்டும்.
14. ஆசீர்வாதம் .
இந்தமுகூர்த்தம் நல்ல முகூர்த்தமகஇருக்கட்டும் .
இந்த குழந்தை நீண்டாயுள் பெறவேண்டும்.
நவ கிரகங்களின் நல்லாசி பெருகட்டும்.
மொத்தத்தில் எல்லா மங்களங்களும் பெற்று மென்மேலும் வளர்வதாக!












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக