ஞாயிறு, 2 மார்ச், 2014

  அன்பு நிறைந்த உள்ளத்தின்  அன்பு வணக்கங்கள்.


இந்த உலகில் உள்ள எல்லா குடிமக்களும் என் சகோதரன், சகோதரிகள் ஆகவே எல்லா சமையமும், இறைவனும் எனக்கு ஒன்றுதான்.இந்த வகை சகொத்ரதுவத்தை நாம் உணர்ந்தால் அனைவருக்கும் எல்லாச் சமயங்கள் அதன்மேல் அவரவர் நம்பிக்கையின் பால் சமமான  மதிப்பும்,மரியாதைக் கொண்டு  வாழ்ந்தால் இந்த உலகில் எல்லா இடமும் அன்பு நிறைந்த ஆன்மீக பூமியாக அமைதியாக இருக்கும்.



                                            மனஅமைதி வேண்டுமா ?


நடக்கும் செயல்களுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல , எது நடந்ததோ அல்லது நடக்கப்போகிறதோ அது இறைவன் (இயற்கை) இச்சையால்  நடக்கிறது. ஆகவே நாம்  அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிட்டு சிறியதை பெரிதுபடுத்தி தவறுகள் செய்கிறோம். உங்கள் அமைதியை  காக்க உங்களுக்கு கொடுக்கப்பட்ட உங்கள் சொந்தவேலையில் மட்டும் உங்களுடைய கவனத்தை செலுத்தினால் மனஅமைதி கிடைக்கும்.

 


சனி, 8 ஜூன், 2013

Indhu Matha Samaiyam LOWKIKAAM part-THREE.

                                  திருமணச்சடங்கு



                                                                                                                             மற்றசம்ஸ்காரங்களைதந்தையோ,ஆசார்யனோசெய்துவைப்பார். இனிவரும்  ஸ்மாச்காரகளை தனக்குதானே ஒருவன் செய்துகொள்ள     விவாகம்செய்துவைப்பார்கள்.விவாகம்என்பதுஉத்வாஹம்,பாணிக்ர ணம்,கன்யாதானம்,கல்யாணம் என்ற பெயர்களிலும்அழைக்கப்படுகிறது.  
   




             

                திருமணம் எத்தனை வகைப்படும்?

                                                                                                                                                                                  1.பிரம்மம் 2.தைவம். 3.ஆர்ஷம் .  4. பிராஜாபத்யம்.         ( இவைகள் மரபு வழி மணங்கள் ) 5.ஆஷுரம் .  6.காந்தர்வம்.(இதை தினைக் கலப்புகாதல் மணம் என்பார்கள் )  7. ராஷஸம். 8. பைஷசம் . 9. ஏறு  தழுவுதல்  10.பலதார  மணம்.


                                            1.ப்ராம்மம்


                                                                                                                                                                            உத்தமமான ப்ர்ம்மச்சாரிக்கு ஒத்தகுலத்தினைச்சேர்ந்தபெற்றோர்கள் தங்கள் பெண்ணை வரதஷினையோ,பரிசமோஇல்லாமல்கன்யாதானம் செய்து தருவது  ப்ராம்மா விவாகம் என்று அழைக்கபடும். 

                                           2. தைவம்.


யக்ஞத்தில் ஒரு ரித்விக்காக உள்ளவருக்குக் கன்யகையை அலங்கரித்து 
தஷைனையாக விவாகம் செய்தவது  தைவம்  என்று அழைக்கப்படும்.


                                           3. ஆர்ஷம்.

இரண்டு  பசுக்களை   தர்ம சாஸ்த்திரப்படி மனமகனிடமிருந்து பெற்றுக் 
கொண்டு பெண்ணை விதிப்படி விவாகம்செய்வது ஆர்ஷம் என்று  அழைக்கப்படும் .

                                           4. ப்ராஜாபத்யம்.

ருதுவாகிவிட்டஒரு பெண்ணை அவளின் தந்தை தர்மகாரியங்களை
தன் மகள் செய்ய ஒரு நல்ல பிர்ம்மச்சரியை தேடி விவாகம் செய்வித்து 
இருவரும் சேர்ந்து தர்மங்களை செய்யுங்கள் என்பது  ப்ராஜாபத்யம்.
இந்த நான்குமுறைகள்தான்  புனிதமானது.   



                                           5. ஆஷுரம்.


ஆஷுரம் என்பது அஷுரத்தனமான (முரட்டுத்தனமான)முறையில் ஒரு 
பெண்ணுக்கு விருப்பமில்லாத ஒருவனை அவனிடமிருந்து பொருளை 
அவளின் பெற்றவர்களோ,உறவினர்களோ பெற்றுக்கொண்டு விவாகம் 
செய்வது  ஆஷுரம். இரண்டாந்தரமாகவும்,வயது மூத்தவர்கலுக்கும் இளம்  பெண்களை திருமணம் செய்வதும்  ஆஷுரம் ஆகும்.


                                          6. காந்தர்வம்.

ஆணும்  பெண்ணும் இச்சையால் ஒன்று கூடி பின்னல் விவாகம்  செய்து 
கொள்வது காந்தர்வ  விவாகம்.  சில மலைவாழ்  மக்கள் ஒன்றாக வாழ்ந்துபின்னல்பிடித்துஇருந்தால்மணம்செய்துவாழ்கிறார்கள்.  நாகரீகம் என்ற பெயரில் மரபு ,உறவு  முறை சிலர்  மீறி கலப்ப  மணம் செய்து கொவதும்  காந்தர்வமே.



                                          7. ராஷஸம்.



பெண்ணின் விருப்பம் மட்டும் அறிந்துகொண்டு அவளின் பெற்றோர் ,
உறவினர்களின் விருப்பத்துக்கு மாறாக பெண்ணை தூக்கி சென்று 
கல்யாணம் செய்துகொள்வது ராஷஸம்.


                                         8. பைஸாசம்.


மணப்பெண்ணின் விருப்பம் இல்லாமல் முறையற்ற விரோதமான           வகையில் மயக்க மருந்து கொடுத்தும், கெடுத்தும் மிகவும் நீச்சதரமாக 
மணம் செய்வது பைஸாசம் ஆகும்.



                                        9. ஏறு தழுவுதல்.


வீர உணர்வுகளை வெளிப்படுத்தல் 'ஏறு  தழுவுதல்' ஆகும்.ஏறு  என்றால் 
காளை ,  தழுவுதல்  என்றால்  பிடித்தல் என்று பொருள்படும். தங்கள் பெண்களை  மணக்கப்போகும்  ஆடவனின் திறமையை  வீரத்தின் 
அடிப்படையில் காணவேண்டி ஏற்படுத்திய  வீர விளையாட்டே  இந்த 
ஏறு  தழுவுதல்  என்ற  இந்த காளை அடக்கி தழுவி நிற்கும் விளையாட்டு.
இவனால்தான் தன்னுடைய மகளையும், சொத்துக்களையும் காக்க 
முடியும் என்று  மகளை திருமணம் செய்வார்கள். 


                                 10. பலதார  மணம் .


                                                                                                                                                                       ஒரு ஆண் பல பெண்களை மணக்கும் முறை வாழ்வில் நாம் தினமும் காணமுடிகிறது. முதல் மனைவிக்கு  குழ்ந்தைஇல்லை என்று  மட்டும்     மறுமணம் செய்துகொள்வது  பொது. ஆனால்  தன்னுடைய அடங்காத  காமத்துக்ககவும், சொத்துக்கும் பலர் பல பெண்களை  திருமணம்  செய்து கொள்கிறார்கள். இது சட்டப்படி மிகமிக பெரிய தவறு.

  சிலஇனத்தில்சில பெண்கள்பலஆண்களைஅவர்கள்குலவழக்கப்படி  
 திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழ்கிறார்கள். 
    
   

         

            விவாஹம் என்ற திருமணம்  விளக்கம்.


வி+வாஹம் என்றால் 'சிறப்பு வஹிப்பது'   என்று பொருள்.யார் எதை 
வஹிப்பது? ஆண், பெண் இருவரும் சேர்ந்து சம்சாரம் என்ற லௌகிக 
பந்தத்தில் சீரும் சிறப்புமாக ஒழுக்கமாக வாழவேண்டும் என்பது பொருள்.

மணம் என்றால் 'கூடுதல், நெருங்குதல், கலத்தல், அழகுபெறுதல்' என்பது 
தமிழ் வழக்கு சொற்கள் ஆகும். மேன்மையான ஒன்றை குறிப்பிட 'திரு '
என்ற அடை மொழி கொடுத்து அழைப்பது பண்டைக்கால மரபு.அதனால்
வாழ்வின் அடிப்படையான  இந்த  கூடுதல் சடங்கு திருமணம் என்று அழைக்க படுகிறது.




 இந்துத் திருமணம் ஆகம மரபு படி சில அம்சங்களை  தழிவியது 
இந்து சமைய முறைப்படி குருமார்கள் இறைவனின் ஆசியுடன் 
நடத்தி வைப்பார். அந்த மரபுகளை  விவரமாக  இப்போது காணலாம்.

1.பொன்னுருக்கள் . 2.கன்னிக்கால் ஊன்றல்

3.முளைப்பாலிகை போடல். 4.பந்தல் போடல்.

5.மணமகன் அழைப்பு . 6.அரசாணிக்கால் 

7.காப்புக்கட்டுதல் . 8.மணமகளை அழைத்தல் . 

9.கன்னிகாதானம் .10.தாலிக்கட்டுதல் .

11.மாலை மாற்றுதல் . 12. பாணிக்கரம் .       

         13.ஏழடீ நடத்தல் .14.அம்மி  மிதித்தல் .                    15. அருந்துதி பார்த்தல் .16. போரிஇடல் .                 17. ஆசீர்வாதம் . 18.பால்பழம் கொடுத்தல் .. 19.புதாக்கலம் .


          திருமண த்தின்  சில  தத்துவங்கள் .

*தாலி கட்டியபின் மகாலட்சுமி வாசம் செய்யும் மணப்பெண்ணின்      உச்சந்தலையில் மணமகன் குங்குமத்தால் திலகமிடுவர்  இது இனி  அவள் அவனுக்கு உரியவள் என்பதை அனைவர்க்கும்   அறிவிப்பதகும் .

   

           

 

              



ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

INDHU MATHAM SAMA IYAM -LOWKIKAAM PART TWO

கடவுள் இருக்கிறார் இல்லை என்பவன் முட்டாள் .



                                 உபநயனம் என்றால் என்ன ?


வேதத்தை  கற்பதற்கு வேத விதிகள்படி  செய்ய  வேண்டிய  சம்ஸ்காரம் உபநயனம்  எனப்படும். எந்தக்  கர்மாவால்  அல்லது  எந்தக் கர்மாவில் ஆசாரியனால்  வேதவித்தை  கற்ப்பிக்க நல்ல  மூகூர்த்தில் மாணவன் தன்னருகில்  கூட்டிக்கொள்ளப்படுகிறனோ      அது  உபநயனம் என்றும் பெயர் பெரும்.தாயிடம் முதல் பிறப்பும் , உபநயனத்தின் பொது மௌஞ்ஜீபந்தனத்தால் இரண்டாவது  பிறப்பும்,  பிராம்மண,  ஷத்திரிய,  வைசியர்களுக்கு ஏற்படுவதால்  அவர்கள் துவிஜர்கள் என்று அழைக்கபடுவர்கள். இதன் பொருள் இருபிறப்பாளர்  எனப்படும்.

"மாதுர்க்ரே  விஜநநம் த்விதீயம் மௌஞ்ஜீ பந்தனாத் \ ப்ரஹ்மண,ஷத்ரிய, விசஸ்ஷுத்திர்க்காரர்,-தஸ்மாதேதே த்விஜா; ஸ்ம்ருதா" 

உபநயனம்  செய்விக்க உரிமையுள்ளவர்கள் ;-

பிதா, பிதாமஹன்,தமையன், ஞாதிகள், கோத்திரத்தில்  பிறந்த முதியோர், என முன்னவர்  இல்லதபோது  பின்னவர்  பின்னவராக செய்விக்க அதிகாரமுள்ளவர்கள் . முன் கூரியவ்ரிள்ளத போதுதன் குலத்துதித்தவரோ , தன்  ஸுத்திரக்காரர் செய்விக்கலாம் .எல்லா வர்ணங்களுக்கும் பிராம்மணனோ , தன் வர்ணத்தில்  கிருஹ்ஸ்தனய் இருப்பவன்  செய்விக்கலாம்-மனைவியில்லதவன் ,சன்னியாசிகள்  உபநயனம் செய்விக்க அதிகாரமில்லை .

         செய்முறைகள் ;-

1 பூர்வாங்க்கம்.   2.புண்யாஹ வாசனம்.    3. ய்க்நோபவீத்தாரணம்.4.குமார போஜனமும் வபனமும்   5.பிரம்மசாரியம். 6. உப நயனம் 7 .உபநயன ஹோமம். 8.ஜ்யாதிஹோமம் . 9.ய்சுர்ப்ரேஷ ப்ராயச்சித்தம் .     10. ப்ரணீ தா மோஷணம் . 11. பிரஹ்மொபதேசம். 12.ஸ்மிதாதானம் .13. பிஷாசரணம்.  14. ஆசீர்வாதம்.  


  


                                         1.பூர்வாங்கம் இந்தசுபதிதியில்இன்னநஷத்திரத்தில்இன்னராசியில்பிறந்தவனும்  இன்னசர்மாஎன்றுபெயருடையவனுமாகியஇந்தக்குமாரனுக்குஉபநயனகர்மாவின்அங்கமாகஉதகசாந்திஜபகர்மாவை செய்கிறேன்.


அங்குரார்ப்பண  கர்மாவைச்  செய்கிறேன்.


ப்ரதிஸ்ரப்ந்த கர்மாவை  செய்கிறேன்.


நாந்தீமுக பிதிரு தேவதைகளுக்கு ஹீரன்ய்தான வடிவில்  பிரீதிசெய்யும் கர்மாவைச்  செய்கிறேன்.


இவ்வாறு  ஸங்கல்பித்த்துப் பூர்வாங்கமான கர்மாக்களை  ஆரம்பிக்க வேண்டும்.ஞானமின்றி உபநயனம்  செய்துவைப்பவனும்  உபநயனத்தால்ஞானத்தை  நாடாதவனும்  இருளிலிருந்து  இருளிலேயே  புகுவர் என்று  வேதம்  கூறுகிறது.            



                       2.புண்யாஹ  வாசனம். 




பரிசுத்தமான இடத்தில் பசுவின்  சாணியால்  சதுரமாக  பூமியை மெழுகி அதன்மேல்நெல்லைப்பரப்பிஅதன்மேல்நெல்லைபரப்பிஅதன்மேல் அரிசியை பரப்பி அதன் மத்தியில் பத்மம்  வரைந்து, பத்மத்தின் மேல் கிழக்கு  நுனியாக தர்ப்பைகளைப்  பரப்புக.  அதன் மேல்  பூர்ணகும்பத்தை கூர்ச்சத்துடன் மாவிலை  தேங்காயுடனம் ஸ்தாபிக்க, பவித்திர மணிந்து தர்பையிலமர்ந்து  தர்ப்பையை  கையில் தரித்து  ஸங்கல்பம் செய்ய வேண்டும்  .




                             3.யக்ஞோபவீததாரணம்  



இந்தசுபதிதியில்இன்னநஷ்த்திரத்தில்இன்னராசியில்பிறந்தவனும், இன்னசர்மாஎன்ற பெயர் கொண்டவனுமான இந்தகுமாரனுடைய உபநயன கர்மாவில்  யக்ஞோப வீதசுத்தியின் பொருட்டு  புன்யஹவசனம் செய்விக்கின்றேன், என்று ஸங்கல்பித்துப் புண்யஹ மந்திரம்ஜபம்செய்து அந்த தீர்த்தத்தால் யக்ஞோப வீதத்தை  புரோஷித்துப் பெரியவர்களின் ஆசியைபெற்று மாணவனுக்குமௌனமாய்ஆசமனம்குருவால் செய்வித்தல். பரிசுத்தி யளிக்கக் கூடியவற்றுள் சிறந்ததும் ஆதியில் பிரம்மா  தோன்றும் பொது அவருடன் தோன்றியதும்,ஆயுளையும், முதன்மையையும் அளிக்க  வல்லதுமாகிய ,வெண்மையான பூணூலை மாணவனுக்கு தரிக்கிறேன். இவன் இதனால் ஞான ஒளியும்,பலமும் நிலைபெற்றவனாய் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் .சுருதிகளிலும் ஸ்மிருதிகளிலும் விதிக்கப் பெற்ற நித்திய கருமங்களை அனுஷ்டிக்கும் தகுதி ஏற்படுத்துவ தர்க்கக வும், பிரம்ம தேஜஸ் விருத்தி ய்டைவதர் காகவும் யக்ஞோபவீதத்தை 'பூனூலை"அணிவிக்கிறேன். கிரகங்களின் பிரீத்திக்காக தானம் செய்யவேண்டும்.அவரவர் சக்தியை  அனுசரித்து  பிராம்மணனுக்கு பதினாரு வயதுவரையும்,ஷத்திரியன்க்கு இருபத்தி இரண்டு  வயது வரையும்,வைசியனுக்கு இருபத்தினான்கு வயது   வரையும்  .உபநயனத்தை ஒதிக்கி வைக்கலாம்.

                                                                                                  -ஆப.1.27


                      4. குமார போஜனமும் வபனமும்

           

உப்பு,கரம்,இல்லாமல்நெய்யும்,பாலும்சேர்த்தஅன்னத்தால்குமாரனுக்கு போஜனம் செய்வித்து தலையின் நான்கு புறமும்  சிகை வபனம் செய்யும் சடங்கு. குளிர்ந்த நீருடன் வெந்நீரைக் கலந்து 'ஆபஉந்தத்து ' என்னும் மந்திரத் தால் சிரத்தை  வபனம் செய்க. இதன் பொருள்   'புனிதமாக்கும்  இந்த குமரனுக்கு  வாயுதேவனே நீ வெந்நீருடன்  இங்கு  எழுந்து அருள வேண்டும்,அதிதி தேவதையே கேசங்களை வபனம் செய்து இவனுக்கு நீண்ட ஆயுள் தரும்படியும் வேண்டுதல் ஆகும்.






 5.பிரம்மசாரிக்குரிய அடையாளங்களைதரித்தல் 




 இம்மாணவனை நீண்ட நல்வாழ்வுக்கு வழிகாட்டி அழைத்து செல்ல  அக்னிக்கு வடக்கில் ஸ்தாபிக்கப்பட்ட கல்லின் மேல் மாணவனை வலது பாதத்தைவைக்கும்படிசெய்துமந்திரங்கள்   ஆசார்யன் சொல்ல வேண்டும். மந்திரத்தின் பொருள் இந்த கல்லைப் போல் நீஉறுதியாக இருக்கவேண்டும்.

மாணவனை கிழ்க்குமுகமாக கல்லின் மேல்நிறுத்தி அவனுக்கு  உடுத்தபுது வஸ்திரங்களை மந்திரங்களை சொல்லியே கொடுக்க வேண்டும். "வஸ்திரமே உன்னை ரேவதீ  தேவதைகள் பஞ்சைச் சீரக்கினர்கள்,கிருத்திகா தேவதைகள் நூல் நூறார்கள் , புத்தி தேவதைகள் நெய்தார்கள்,க்னா ' என்ற தேவதைகள் தறியிலிருந்து நெய்து எடுத்தார்கள்,  இதுபோல் ஆயிரம் தேவதைகளின் உழைப்பு உன் இழைதோறும் உள்ளது. ஆகவே வஸ்திரமே  இவனை நன்றாக உடுத்தி நூறு ஆண்டுகள் வாழும்படி அனு கிரகங்கள் செய்யுங்கள் " என்பது  மந்திரங்களின் பொருள்.                                                                                                                      

வஸ்த்திரம் உடுத்தும் மந்திரத்தின் விளக்கம் "மாணவனே எல்லா நலனுக்கும்நீகாரணமாகஇருக்கும்பொருட்டுஇந்தவஸ்த்திரத்தை அணிந்துகொண்டாய் உன்னைசூழ்ந்தவர்களின்இன்னலைப்போக்கிக் காப்பவனாய்விளங்கு வாயாக,மேலும் .பல வழிகளிலும் பொருள்தேடி அவைகளை நல்ல வழியில் ஆண்டும்  மற்றவர்களுக்கும் பிரித்து கொடுத்தும் பல்லாண்டு நோய்நொடி இல்லாமல் வாழ்வாயாக "என்பது இதன் பொருளாகும்.





                                           6. உபநயனம். 


"தேவஸ்ய  த்வா " என்ற மந்திரத்தால் மாணவனை குரு தன்னருகில் அனைத்துக் கொள்கிறார். ' சுப்ரஜா'  என்ற  மந்திரத்தைகாதில் ஓதுவார் .பொருள்  வீரர்களில் நல்ல வீரனாகவும், ஞான ஓளியால் நல்ல ஓளி யுடையவனாகவும், போஷனையால் நல்ல புஷ்டியுடைவனகவும் விளங்கவாய் என்பதாகும்.


' பர்ஹமசர்யமாகாம் ' என்பது மாணவன் குரு கேள்விகளுக்கு  பதில்             உ ரைத்தல் .மாணவன்;- பிரம்மசாரிய விருதத்தை ஏற்றுக்கொண்டு விட்டேன் என்னை ஸவித்ரு  தேவனுடைய அருளால் உங்கள் அருகில் தங்கள் பக்கத்தில் வைத்துகொள்ளவேண்டுகிறேன்.குரு;- சூரியதேவனே  இவன் உன்னுடைய பிரம்மசாரியாவன். நீ இவனை இரஷித்துருளல்  வேண்டும்.  இவன்  அகாலத்தில்  ம்ரணமடையக்கூடது.  நீண்ட ஆயுள்  உடையவனாக வைத்திருக்கவும்.      





                          7. உபநயன ஹோமம்


                                      ஏற்கனவே  குறிப்பிட்டபடி   ஆசாரியர் ஆஜ்யபாகம் முடியச்செய்த அக்கினியில்மாணவன்கையைப்பிடித்துக்கொண்டு ஆஹுதிகளைச் செய்வித்து,  ஜயாதி ஹோமத்தையும்  ப்ரிஷேசனம்  வரை செய்க  'யோகே யோகே' மந்திரங்களை மாணவனுக்கு ஆசார்யன் சொல்  வித்து  மாணவன் ஹோமம்  முடிக்கவும். ஹோமத்தின் விளக்கம் அக்னியே  நீர் இந்த மாணவனை நீண்ட ஆயுளும், புத்தி கூர்மை உடையவனாகவும் செய்வீர். வருணனே  இவனுடைய பிரம்ம்சர்யம் முடிந்தபின் இவனுக்கு பிரியமான புத்திரன் உண்டாகும் வீரியம் கொடுப்பீர். ஸோமராஜனே நீரும் ஆசிர்வதிக்கவும்.  அதிததேவியே தாயாக இவனை காப்பாய் .  தேவர்களே  புத்திரர்கள் மக்களை பெற்று தந்தைகளாகும் பொழுது இடையில் ஆயுளை சோதிக்காமல் அருள் புரியுங்கள்.       



                         8.  ஜயாதி ஹோமம் .


கர்மாவின் செழிப்புக்காக ஜயாதி ஹோமம் செய்விக்கிறேன். இதை ஆசாரியனே செய்யவேண்டும்.




                    9.யஜுர்ப்ரெஷ பிராயசித்தம் 

                                   எந்த கர்மாவில் வேத மந்திர உச்சாரணத்தில் பிழை   இருக்குமோ அங்கு ' புவ; ஸ்வஹா! வாயவ இதம் ந மம !' அந்தக்கர்மவிற்கேற்ப அக்னியில் ' புவ; ஸ்வஹா !' என்ற  ஆஹுதியோ  'அனாஜ் ஞாதம்'என்ற மூன்று ஆஹுதியோ செய்யப்படவேண்டும். 




                             10.  பரணிதா மோஷணம் .


'அனாஜ் ஞாதம்  யதாஜ் ஞதம் ' முதல் 'சப்தயோ யோனீ  ராப்ருனஸ்வக் ருதேன ஸ்வஹா'  என்றவரை  ஹோமம்  செய்து  நெய்பத்திரத்தை  வடக்கேவைத்துவிட்டுப்  பிராணாயாமமும்  ப்ரிஷேசனமும்  செய்து  ப்ரணீ தா  மோஷணம், முடிக்கவும். 



         
 


                             11.  பிரஹ்மோபதேசம்.


       நீக்கமற நிறைந்த சபையோர்களே!    உங்கள்பாதங்களில் என்னால் ஸமர்பிக்கப்பட்ட இந்த ஸ்வர்ண  தஷினையை  ஏற்று இன்ன நஷத்தி ரத்தில்  இன்ன  ராசியில்  பிறந்தவனும் , இன்ன சர்மா என்ற பெயருடைய இந்த குமரனுக்கு பிறந்தது முதல் இந்தவினடிவரை  பிறசாதிததியிடமும்,செவிலித்தயிடமும்    பாலுண்டதாலும், பிரசாதி  கூட்டத்தில் சமபந்திபோஜனம் சாப்பிட்டத்தாலும்,தொட்க்கூடாதவற்றை  தொட்டதலும் ஏற்பட்ட  பரிசுத்தமின்மையால்  ஏற்ப்பட்ட  எல்லா பாவங்க்ளுக்கும் பிராயசித்த  வாயிலாக காயத்ரீ  ஸ்வீகாரத்திர்க்கும்  யோக்யதை அடைய அனுக்கிரகம் செய்தருள வேண்டும்.   


             

                           12.ஸ்மிதா தானம் .


விட்டிலிருந்து  அக்கினியெடுத்து  பிரதிஷ்டை செய்து  விறகிட்டு எரியச்செய்து  காலை ,மற்றும் மாலை ஸ்மிதா தானம் செய்யவேண்டும்.தொடர்து செய்துவந்த்ல் ஆயுளும், செல்வமும் கூடியவனாய்  நன் மக்கட் பேறு பெற்றவனாகவும்,  ஞான ஒளி பெற்றவனாகவும்,சூரியன்போல் பிரகாசிக்க  வேண்டுதல்  ஆகும்.








                                     13. பிஷா சரணம் .


பிர்ம்மசர்யவ்ரதம்;-பகலில்  தூங்கக்கூடாது.  வாசனை திரவிங்கள்    உபயோகிக்கக் கூடாது .  பெண்களுடன் நெருங்கி பழகக் கூடாது. நாட்டி யங்களை பார்க்ககூடது. உலக  நடவடிக்கையை  பற்றி  வம்புப் பேசக்கூடாது. பிட்ஷை யில்  கிடைத்ததை கொண்டுதான் வாழ வேண்டும் .குருவுக்கு அடங்கியவனாய்   ' பவதி  பிஷம்.தேஹி,---என்று கூறிப் பிஷை எடுத்து குருகுல வாழ்க்கை வாழவேண்டும்.    

                                    14. ஆசீர்வாதம் .


இந்தமுகூர்த்தம்   நல்ல முகூர்த்தமகஇருக்கட்டும் .


இந்த குழந்தை நீண்டாயுள் பெறவேண்டும்.


நவ கிரகங்களின்  நல்லாசி பெருகட்டும்.


மொத்தத்தில் எல்லா மங்களங்களும்  பெற்று மென்மேலும்  வளர்வதாக!

















  





    

சனி, 15 செப்டம்பர், 2012

INDHU MATHM 'Samaiyam' part' 2' LOWKIKAAM.part.ONE

           கடவுள் உண்டு,கடவுள் உண்டு,மனிதனை படைத்தது கடவுள்தான் .

                                  


                                     லௌகீக வாழ்க்கை           

 இந்து மத ஸம்ஸ்காரங்கள்  என்றால் என்ன? அவை யாவை? 
 "ஸம்ஸ்காரோ ஹி நாம  கார்யாந்தர  யோக்யதா கரணம் " 



            என்கின்ற வார்த்தைக்கு  ஒரு பொருளைக் கொண்டு ஒரு செயலை நல்லபடியாக முடிப்பது  என்பதாகும் . ஸம்+காரம் என்று பிரித்தல் ஸம்-என்றால் நன்றாக,காரம்- என்றால் ஆக்குவது  அதாவது ஸம்ஸ்காரம் என்றால் நன்றாக ஆக்குவது என்று பொருள்படும் . அதாவது உணவு தயாரிக்கவிறகுதேவைபடுகிறது,விறகை ஈரத்தன்மைபோக்கவெய்ய லில்உலர்த்துகிறோம்,உலர்த்துதல்விறகுக்குநாம்செய்யும்ஸம்ஸ்காரம்.வீட்டுக்குவெள்ளைஅடிப்பது,பூட்ஸ்பாலிஸ்போடுதல்ஸம்ஸ்கார ங்கலே தைத்தான்லௌகீகம்என்றுசொல்லுகிறோம்.இதுபோல்ஒருஜீவனை ஆன்மிகத்தில்இறைவனிடம்சேர்க்கசுத்தபடுத்துகிற செயலை மானிட தர்ம ஸம்ஸ்காரங்கள்என்றுநமக்குசாஸ்த்திரங்கள் சொல்லுகின்றன. அவைகள் என்னென்ன என்பதை விரிவாக காண்போம்.
                              ***************************************************  




                                ஒன்று. கர்ப்பாதானம்.


      ஒரு ஜீவனைஆண்-பெண் சங்கமத்தினால்"கர்ப்பம் தரிக்க ச்செய்தல் "
என்பது இதன் பொருள். ஆடு,மாடு போல் மிருகத்தனமாக புணராமல் 
விதி முறைகளை கடைப்பிடித்து புணர்ச்சியில் ஈடுபடுதல் வேண்டும்.
ஆண்-பெண் கலப்பு விதிமுறைப்படி மதிக்காமல் வெறும் காமசுகத்துக்கு 
மட்டம்  ஈடுப்பட்டால் பிறக்கும் ஜீவனைத்தன் அது பாதிக்கும்.

                                                       கன்னிஹா தானம் பெற்ற ஒரு ஆண்மகனுடன்,
பாணிக்கிரஹனம் செய்து கொண்ட ஒரு பெண் முறைப்படிபெற்றஜீவன் 
தான் பல வகையிலும் சிறப்புற்று விளங்கும்.  
                                                                     *****************
         கர்பாதான  பெண்-ஆண் ஸங்கமம் சம்பந்தமான  பொது நியமனங்கள்.

மாதாமாதம் மாதவிடாய் நாளிலிருந்து பதினாறு இரவுகள் பெண்களுக்கு கர்பாதான சரியான காலமாகும். 
           
இதில்  முதல் நான்கு நாட்டளில் கூடுதல் கூடாது . மீதமுள்ள பன்னிரண்டு 
இரவுகளில் இரட்டைப்பட்ட நாட்களில் உறவு கொள்ளலாம்.

இந்தப் பன்னிரண்டு நாட்களுக்குப் பின்னால் அடுத்து மாதவிடாய் வரை 
உறவு கூடாது .

அமாவசை,அஷ்டமி,பௌர்ணமி,சத்ர்த்தி,திதிகளிலும், மகம்,முலம், ஆகிய நஷ்த்திரங்களிலும்  பெண்கள் பற்ப்பல நியமங்களுடன் இருந்தால்   உடல் மெலிந்து பக்குவமாய் விடும். இந்நிலையில் உறவு கொண்டால் அவசியம் கர்ப்பம்தரிக்கும்.

ஒரு இரவு ஒருமுறை மட்டுமே உறவு நன்மைபயக்கும். பகலில் உறவு 
கொள்ளுவது  கூடாதது .

இந்த ஸமஸ்காரம் ஒரு ஜீவனை  நாம் படைக்க ஒரு கருவியாக மட்டும் பயன்படுவதால் நீக்குப் போக்காக இருக்க கூடாது. ஏன்என்றால் ஒர்றறிவு
முதல் ஐந்து அறிவு ஜீவன்கள் இனவிருத்திக்காக மட்டும்தான் உடலுறவு 
கொள்ளுகின்றன, ஆனால் நாம் மட்டும்தான்  உடல் சுகத்துக்காக உறவு 
கொள்ளுகிறோம். 
                                                ******************************


             ஸம்ஸ்காரம். இரண்டு .  பும்ஸ்வனம் 








    கருவில் உண்டன ஜீவனை குறித்து செய்யப்படும் இரண்டாவது சடங்கு .

 கருதரித்த மூன்றாம் மாதம் அந்தஜீவன் ஆணா,பெண்ணா என்றுஅமைப்பு
மாறும் நிலையில் "ஆண் பிள்ளை பெறச்செய்தல்" என்ற சடங்கு இது.

முதலில்பிறக்கும் முதல்குழந்தை பிற்காலத்தில் தாய் ,தந்தை, குடும்ப பாரத்தை சுமக்க தலைச்சன் ஆணாகஇருப்பது நல்லதுஎன்றும் ,முதலில் பெண் பிறந்து அது கஷ்டம் படக்கூடாது என்பதற்காகவும் செய்யப்படும்  
சடங்கு இது. இது முதல் கருவுற்ற சமையம் மட்டும் செய்யப்படும்.
             
ஆலமரத்தின் மொட்டை நன்றாக கசக்கி கருவுற்ற கர்ப்பிணி பெண்ணை      மல்லாந்தவாறு  வைத்து வலது மூக்கினுல் சாற்றை பிழிவார்கள் ,அந்த  பெண்ணும் சாற்றை நன்றாக உறிஞ்சவேண்டும். இப்படிசெய்வதால்அவள்  கர்பத்தில்உள்ள ஜீவன் ஆணாக மாறி விடும். இப்படிசடங்கைசெய்தால் குழந்தைஆணாக பிறக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. நம்புவது, நம்பாதது அவரவர் விருப்பம்.
                                                       **************************

     ஸம்ஸ்காரம் . மூன்று . ஸீமந்தோந்நயநம் .








                 கர்ப்பம் தரித்த ஜீவனை சுமக்கும் பெண்ணுக்கு ஆறாவது அல்லது 
எட்டாவது மாதத்தில் செய்யப்படுவது இது.

"ஷீமந்தம்"  என்றால் தலை வகிடு என்றும்," உந்நயனம்"என்றால் மேல் 
நோக்கிஇழுத்துக்கொண்டு போவது என்றும் பொருள். சாஷ்த்திரங்கல்படி 
கர்ப்பிணிப்பெண் கணவனாலேயே நல்ல சுபதினத்தில் உயர்ந்த கருத்து 
மிகுந்த மந்திரங்கள் கூரிசெய்யப்படும் சடங்கு இதுவாகும்.

                                                      ஜீவனை சுமந்துள்ள கர்ப்பவதியின் வகிட்டில் 
மந்திரங்கள் ஓதி கீழிருந்து மேல்நோக்கி பன்றியின் முள்ளால் மெதுவாக 
கீறிக் கோடுபோடுவதால் உள்ளே இருக்கும் ஜீவன் நன்றாக இருக்கும் 
என்பது ஐதிகம். கண்ணாடி வளையல் போடுவது அப்படி,இப்படி திரும்பும் 
பொழுது வளையல் உடையாமல் பாதுகாப்பாக நடப்பதால், பெண்ணின் 
வயற்றுபகுதி பாதுகாக்கபடும். இப்படி செய்வதற்குத்தான்   வளைகாப்பு, ஸீமந்தம்செய்வது என்றும் , கட்டுசொத்து விருந்து  என்றும் கூறுவார்கள்.
                        *******************************************************


               ஸமஸ்காரம்   நான்கு. ஜாதகர்ம



         கருவிலிருந்த ஜீவன் பிறந்தவுடன் ஜாதகர்ம ஸம்ஸ்காரம்  செய்ய 
வேண்டும்.கர்ப்பதானம் செய்த ஜீவனின் தந்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் 
ஆற்றில் நீராடவேண்டும்,தானங்கள் செய்யவேண்டும். குறிப்பாக விதை 
நெல் தானியத்தைத் தரவேண்டும். 
                                                ***************************


                  



                  ஸம்ஸ்கரம். ஐந்து. நாமகரணம். 


     நாமகரணம் என்றால் " பெயரிடுவது" என்பது பொருள். இதைதொட்டில்
இடுவது  என்றும் கூறுவார்கள் . பிறந்த ஜீவனாகிய குழந்தையின் பிறந்த 
பதினோராவது  நாள் இந்த சடங்கை செய்வார்கள். மேலும் தற்பொழுது 
ஜாதகர்ம,தொட்டிலிடுவது ,பெயரிடுவதும் சேர்த்து புண்ணியாவஜனம்
என்ற சடங்கை  செய்து ஜீவனை பெற்ற தாய்  தலைக்கு குளிக்க செய்து 
தீட்டு கழிப்பதாக  கொண்டடுகிறார்கள்.

                                                                     குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு 
குழந்தையின் தந்தை சொல்லும் மந்திரம் என்னவென்றால் "என்னுடைய 
உடலில்லிருந்து வந்திருக்கிறாய், என் ஆசைகளை பூர்த்தி செய்து வந்து 
இருக்கிறாய்.,நான் உன்னை ஆசையுடன் அனைத்து கொள்ளுகிறேன்."

மேலும் இந்த நஷத்திரத்தில் பிறந்தால் இந்த பெயர்வைக்க வேண்டும்.
கடவுளின் பெயர்களை  வைக்கவேண்டும். நம் முனோர்கள் பெயர்கள் 
வைக்கவேண்டும்.என்று தரமான பெயர் தேர்ந்து எடுத்து அந்த பேரை 
குழந்தையின்காதில் கூப்பிடுவர்கள் இதை வீட்டு பெரியவர்கள் தொடங்கி 
வைப்பார்கள். 
                            ************************************************


            ஸம்ஸ்காரம். ஆறு. அன்னப்ராசனம்

             


       ஆறாவது  ஸம்ஸ்காரம் இது . குழந்தைக்கு உணவூட்டும் சடங்கு இது .
இதை ஆறாவது மாதத்தில் கருத்துக்கள் நிறைந்த மந்திரங்கள் கொண்டு 
வீட்டிலும்  சிலர் கோவிலிலும் தந்தை மந்திரங்கள் சொல்ல குழந்தைக்கு 
உணவு ஊட்ட  குழந்தை சாப்பிடும்.  
========================================================================




                   ஸமஸ்காரம். ஏழு. சௌளம்  

ஏழாவதுஸம்ஸகாரம்சிகைமழித்தழ்ஆகும்.முதல்ஆண்டுநிறைவு  அடைந்தாவுடன்அவரவர்குலஆசாரப்படிதலையைமுண்டனம்     செய்வது.மூன்றாவதுவயதில்சிகைவைப்பது,காதுகுத்துவதுமரபு                           வேத அத்யயனம் செய் யும்  பொழுதும் . தர்மப்படி இல்லறத்தில் 
இருந்து கொண்டு  தாம்பத்திய  உறவு  கொள்வது ஆகியவற்றிலே 
சரீரத்துக்கும்  சரீரத்தின்  நாடி  சலனங்கள் மூலம்  சித்தத்துக்கும் 
ஏற்பட வேண்டியதான  பலத்துக்கு  தலையில் சிகை என்ற ரஷை 
இருப்பது பெரிய  பாதுகப்பகும் .    

------------------------------------------------------------------------


       





        


    


















உப நயனம்  எட்டாம் ஸம்ஸ்காரம் 






உபநயனம் என்பது ஆண் குழந்தைக்குமட்டுமே உரியது.                                                                        இதுவும் பெரியவர் களால்  நடத்தபடுவது . உப-என்றால்  சமீபத்தில் ,நயனம் என்றால் அழைத்து கொண்டு போவது என்பது பொருள் . தந்தை மூலம் ஆச்சாரியார்  கொண்டு ப்ரம்மச்சர்ய  ஆசிரமத்திற்கு அழைத்து செல்லுதல்  எனப்படும் . உபநயனம்  செய்ய  

ப்ராம்மணனுக்கு ----எழு  வயது  இரண்டு மாதத்துக்கு  மேல் .

சத்திரியர்களுக்கு ---பன்னிரண்டு  வயது  வரை .

வைச்யர்களுக்கு ----பதினாறு  வயது  வரை .

உபநயன சம்ஸ்காரத்தின்  அடையாளமாக முப்புரிநுல் அணிவிக்கபடும் 
காயத்ரீ  மந்திரம்  உபதேசிக்கப்படும்.

''காமம் புகும்  முன்னே காயத்ரீ  புகுந்துவிட  வேண்டும் '' என்பது 
பழமொழி.    

பிரம்மச்சர்ய  ஆசிரமத்திற்கு ஆரம்பம்  உபநயனம். அந்த அச்ரமத்தின் 
நிறைவு  சமாவர்த்தனம் . பிரம்மச்சர்ய  வாழ்ககையில்  வாசனை 
திரவ்யங்களை பூசிக்கொள்ள கூடாது .
------------------------------------------------------------------------------------------------------------------------------




               சமவர்த்தனம் ஒன்பதாவது ஸம்ஸ்காரம் 

                                                                                                                                                  ஸ்நாநம்  என்றும்  இதற்குப் பெயர் உண்டு . நல்ல மங்களகரமான 
த்ர்வ்யங்கள் எண்ணை .சிகைகாய்த்துள் கொண்டு வெந்நீர் ஸ்நானம் 
செய்து  உயர்ந்த ஆடைகளை உடுத்துவது  ப்ரம்மச்சர்யா ஆச்ரமத்தின்  
முடிவில்தான்  ஒருவனுக்கு  விதிக்கப்பட்டுள்ளது . ''குருகுலத்தில் 
இருந்து தன்அத்யயனத்தை முடித்துக் கொண்டு தனது இருப்பிடத்திற்குத்
திரும்புதல் ''என்பது  இதன்  பொருள்.   





                        விவாஹம்  பத்தாவது  ஸம்ஸ்காரம் 

            இதற்கு முன் முடிந்த எல்லா ஸம்ஸ்கரங்கள் தந்தையோ,
ஆசார்யனோ செய்து வைப்பார்கள். இந்த சம்ஸ்காரம் மூலமாக 
இனி  வரும்  சம்ஸ்காரங்கள் யாவையும் ஒருவன் தனக்குத்தானே 
செய்து  கொள்ள வேண்டியவையாகும்.

விவாஹம் என்பது  உத்வாஹம், பணிக்ரகனம், கன்யாதானம் ,
கல்யாணம்  என்றும்  அழைக்கப்படுகிறது .

வி +வாஹ, உத்+வாஹ,  என்ற இரண்டும்  'சிறப்பாக அமைவது'
என்ற பொருள் படும் . ஆண் +பெண் சேர்ந்தால் தம்பதி .தம்பதி 
ஒன்று சேர்ந்து க்ருஹஸ்த தர்மத்தை  சிறப்பாக அமைத்து 
கொள்வது  என்பது பொருள் . மனைவியானவள்  கணவனுடன் 
சேர்ந்து தர்மனுஸ்டானத்துக்கு துணையாக வேண்டும். மேலும் 
இந்த ஸ ம்ஸ்காரத்தை ஸஹதர்மசாரிணி  ஸம்யோகம் என்றும் 

 
அழைப்பர்கள்  


------------------------------------------------------------------------------------------------------------------------------

முதல்   ஏழு  ஸமஸ்காரங்கள் ஆண் ,பெண்  இருபாலருக்கும் சமம் 
எட்டாவது  ஸமஸ்காரம் பெண்களுக்கு இல்லை. சமவர்த்தனம் என்ற 
ஒன்பதாவது ஸமஸ்காரம் பெண்களுக்கு ருது அடைதல்  என்று 
நடத்தப்படுகிறது.


                                           ஸமஸ்காரம்  ருது 

  

 ருது என்பதற்கு பூப்படைந்த  பெண்ணை புனிதமாக்கும் நீராட்டு விழா 
எனபொருள்படும்.அதாவது பருவ வயதை அடைந்த  இது 12 வயது முதல் 
15வயதுவரைஅவரவர்உடல்வகுபடிபால்முதிர்ச்சிஅடைந்துபருவமாற்ற 
பொழுது  நடைபெறும் சமயச்சடங்கு ஆகும், இதன் பொருள் அந்தப்பெண் 
சந்தான விருத்தி அடையக்கூடிய கரு உற்பத்தியாகும் மாதவிடாய் நடை 
பெற்ற சுபநிகழ்ச்சியாக  அழைக்கப்படுகிறது. முன்பெல்லாம் பூப்ப்டைந்த 
பெண்ணின் தாயாரிடம் பேரன் பிறந்து விட்டானா? என்று கேட்பார்கள். 







பார்த்த பார்வை யாளர்களுக்கு  நன்றி 




என் தொடர்ப்புக்கு :- 91 +95006 71949.